பிரதமர் வி.உருத்திரகுமாரன் – தொல்.திருமாவளவன் அமெரிக்காவில் சந்திப்பு !

976 Views

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களுக்கும், தமிழகஎவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தொல்.திருமாவளவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் அடிமைத்தனம் குறித்து நியூயார்க்-கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ( Columbia University) இடம்பெற்றிருந்த கருத்தரங்கொன்று இடம்பெற்றிருந்தது.

சிறிலங்கா, பங்காளாதேஸ், பாகிஸ்தான், நேபாளம், தென்னாபிரிக்கா என பல்வேறு நாடுகளில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கெடுத்திருந்தனர். இதில் பங்கெடுக்க வருகை தந்திருந்த தொல்.திருமாவளவன் அவர்களுடன் சந்திப்பினை மேற்கொண்டிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இக்கருத்தரங்கின்கு தனது தோழமையினைத் தெரிவித்திருந்தார்

Leave a Reply