பிரதமர் பதவியை துறக்கின்றார் ரணில்

570 Views

ரணில் விக்கிரமசிங்க தனது பிரதமர் பதவியை நாளை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பலத்த சங்கடங்களின் பின்னர் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை நாளை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவிடம் கையளிப்பார்.

உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த அனேகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்பவில்லை. எதிர்வரும் மார்ச் மாதம் வரை கோத்தபயா தரப்பு இடைக்கால அரசு ஒன்றை நிறுவ, வசதியாக அவர் பதவி விலக வேண்டுமென கட்சிக்குள் வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து ரணில் விக்கிரமசிங்க நாளை பதவி விலகுகின்றார். இதனையடுத்து மகிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்பார் எனத் தெரியவருகிறது.

இந்த முடிவு அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்டதேயாகும். இனி இலங்கையின் முழு அதிகாரமும் ராஜபக்ஸ குடும்பத்தினரின் கையிலேயே வீழ உள்ளது.

 

Leave a Reply