பிரதமர் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவார் – வடிவேல் சுரேஷ்

442 Views

பெருந்தோட்டத்துறையின் கொடுப்பனவு விடையத்தில்  கடந்த அரசாங்கத்தினாலும் தொழிற்சங்கங்களினாலும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே அத் தொழிலாளர்கள் வந்துள்ளனர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம்,1000ம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கூறினார். அவரது வாக்குறுதி மீது முழுமையான நம்பிக்கை எமக்கு உண்டு என ஐக்கிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பெருந்தோட்ட மக்களின் உண்மையான நிலைமையை கூறுகையில் அதனை அரசியல் மயப்படுத்தாது உண்மை நிலையை யோசிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“இது இனம் சம்மந்தப்பட்ட விடயம் அல்ல என்று கூறிய அவர், தொழில் சம்மந்தப்பட்டது என்றும் அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை எனினும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1000ம் ரூபா கொடுக்கப்படும் என்று வரவு செலவு திட்டம் தாக்கல் செய்த போது பிரதமர் கூறியுள்ளார். எனவே அவரது வாக்குறுதி மீது முழுமையான நம்பிக்கை உள்ளது.  அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றுவார்” என்றார்.

Leave a Reply