பாராளுமன்றில் 10 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா – கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று

பாராளுமன்றத்தில் கடமையாற்றும் 10 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றக் கூட்டத் தொடர் நாளை செவ்வாய்கிழமை நடைபெறவிருக்கும் நிலையிலேயே நேற்றைய தினம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றிருப்பது தெரியவந்திருக்கின்றது.

இதேவேளை, இந்த வாரப் பாராளுமன்றக் கூட்டத் தொடரை எவ்வாறு நடத்துவது என்பதையிட்டு ஆராய்வதற்காக கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

குறைந்தளவு பணியாளர்களுடன், கடுமையான சுகாதார வழிகாட்டல்களுக்கமைவாக பாராளுமன்றக் கூட்டத் தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply