பாராளுமன்றக் கூட்டத் தொடரை இடைநிறுத்துகிறார் ஜனாதிபதி!

சிறீலங்கா பாராளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இடைநிறுத்தவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

புதிய கூட்டத்தொடர் டிசம்பர் 12 இல் ஆரம்பம் எனவும் அவரது இந்திய பயணத்தின் பின்னர் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இம்மாதம் 29ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.