பாஜக அரசு வெளிநடப்பு செய்தது உலகத் தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் – ஸ்ராலின் சீற்றம்

361 Views

ஜெனிவாவில் இந்தியா வாக்களிக்காமல் தவித்ததை, “தமிழர்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்” என திமுக தலைவர் மு.க.ஸ்ராலின் கடுமையாகச் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் பின்வருமாறு பதிந்துள்ளார்:

“இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக பாஜக அரசு வெளிநடப்பு செய்தது உலகத் தமிழர்களுக்கு பச்சைத் துரோகம்!

தமிழ்நாட்டில் தேர்தல் என்பதால்தான் வெளிநடப்பு. இல்லையென்றால் ஆதரவாகவே வாக்களித்திருக்கும்! இதனை தமிழர்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்.”

Leave a Reply