பாகிஸ்தானுடன் உறவுகளை பலப்படுத்த இலங்கை உறுதி

டுபாயில் இடம்பெற்றுவரும் கோப்-28 என்ற காலநிலை மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கா அங்கு பல நாடுகளின் தலைவர்களை சந்தித்து இலங்கைக்கான ஆதரவுகளை திரட்டி வருகின்றார்.

இந்திய பிரதமர் நரேங்திரமோடி, பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மைக்ரோன், மைக்ரோசொப்ட் இன் தலைவர் பில் கேட்ஸ் போன்றவர்களை சந்தித்த அவர் பாகிஸ்தானின் பிரதமர் அன்வர் அல் கஹ் காகாரையும் சந்தித்துள்ளார்.

அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் இரு நாடுகளும் தமது உறவுகளை பலப்படுத்துவதுடன், இரு நாடுகளின் மக்களும் தமது உறவுகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இரு தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.