பலஸ்தீன இன அழிப்பை நிறுத்தக் கோரி கிண்ணியாவில் மக்கள் போராட்டம்

இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் பலஸ்தீன் மக்கள் மீதான இன அழிப்பு தாக்குதலை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (03) வெள்ளிக்கிழமை பகல் 1..00 மணியளவில் கிண்ணியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றது.
கிண்ணியா சூரா அமைப்புடன் பல சமூக நிறுவனங்களும் இணைந்து ஏற்பாடு செய்த மேற்படி கண்டன எழுச்சி பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில்  பலஸ்தீன் மக்கள் படுகின்ற இன்னல்கள் குறித்து விளக்கமளிக்கப் பட்டதோடு அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்யப்பட்டு கண்டனக் குரல்களும் எழுப்பப்பட்டன.
palastine பலஸ்தீன இன அழிப்பை நிறுத்தக் கோரி கிண்ணியாவில் மக்கள் போராட்டம்