பலஸ்தீன் மக்களுக்கு எதிரான போரை கண்டித்து மூதூரில் அமைதிவழி போராட்டம்

பலஸ்தீனில் இடம் பெறும் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து மூதூரில் இன்று (20) ஜூம் ஆ தொழுகையின் பின் அமைதி வழி போராட்டமொன்று மணிக்கூட்டு கோபுர சந்தியில் இடம் பெற்றது.

பயங்கரவாத தாக்குதலை நிறுத்தக்கோரியும் சிறுவர்கள் கொல்லப்பட்டமை பல தாக்குதல்களை நடாத்துவதை நிறுத்த கோரியும் இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது. பலஸ்தீனில் பல உயிர்களை பயங்டரவாத தாக்குதல் மூலமாக பழி கொண்டார்கள் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பலஸ்தீனிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சிறுவர்களை கொல்லப்படுவதை நிறுத்து,பயங்கரவாதத்தை ஒழி போன்ற வாசகங்களை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஜூம் ஆ தொழுகையின் பின் இடம் பெற்ற குறித்த அமைதிவழி போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன் அநேகமான பள்ளிவாயல்களில் விசேட ஜனாசா தொழுகையும் இடம் பெற்றதுடன் துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றது.