பறக்கும் சவப்பெட்டிகளை மீண்டும் வாங்குகின்றது சிறீலங்கா

300 Views

சீனாவிடம் இருந்து மேலும் இரண்டு வை-12 ரக விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் கெர்பின் குழுமத்திடம் இருந்து ஒவ்வொன்றும் 3 மில்லியன் டொ-லர்கள் பெறுமதியான இரண்டு வை-12 விமானங்களை சிறீலங்கா கொள்வனவு செய்கின்றது.

கடந்த வாரம் சிறீலங்காவின் கப்புத்தளை பகுதியில் சிறீலங்கா வான்படையின் வை-12 ரக விமானம் வீழ்ந்து நொருங்கியதால் அதில் பயணம் செய்த 5 வான்படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

பொதுமக்களுக்கான உள்நாட்டு பயணிகள் விமானமாகவும் பயன்படுத்தப்படும் இந்த விமானம் பறப்பதற்கான முறையான பாதுகாப்புச் சான்றிதழ் அற்ற விமானம் என கொழும்பு தகவல்கள் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, உள்ளூர் விமான சேவைகளுக்கு சிறீலங்காஅரசு பயன்படுத்தும் அன்ரனோவ் மற்றும் வை-12 ரக விமானங்கள் முறையான பராமரிப்பு அற்றவை எனவும், அவை பாதுகாப்பு அற்றவை எனவும் தெரிவித்துள்ள தனது பெயரை குறிப்படவிரும்பாத அதிகாரி ஒருவர், இந்த விமானங்கள் பறக்கும் சவப்பெட்டிகள் என தெரிவித்துளார்.

Leave a Reply