பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக வடக்கு ஆளுநர் சுரேன் ஆலோசனை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் புனரமைக்கப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகத்தை வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பார்வையிட்டார்.

புதன்கிழமை (29) மாலை துறைமுகத்தின் ஆரம்ப கட்ட அபிவிருத்தி வேலைகளை அவர் நேரில் சென்று பார்த்தார். பருத்தித்துறை பிரதேச மீனவர்களின் நலன் கருதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இந்த துறைமுக அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

துறைமுகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள மெதடிஸ்ட் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர், இந்த துறைமுக அபிவிருத்தியில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் பற்றி கலந்தாலோசனை செய்தார்.

பாடசாலையின் பெற்றோர், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பருத்தித்துறை ஆய்வு நிறுவன பணிப்பாளர் முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன் ஆகியோரும் இக்  கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

 

Leave a Reply