420 Views
தற்போதைய பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் ஜூன் 7 திங்கள் வரை நாடு முழுவதும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயலணி இன்று காலை இந்தத் தீர்மானத்தை அரசுக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை அத்தியாவசிய பொருட்களை நாளை (25), மே 31, ஜூன் 4ஆகிய திகதிகளில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை இன்று பிற்பகல் சிறப்பு குழு கூடி முடிவெடுக்கும் எனவும் தெரிய வருகிறது.