பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்  விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் விடுவிப்பு

512 Views

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் சுலக்சன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புலம்பெயர் நாட்டில் வசிக்கும் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர் என அடையாளப்படுத்தப்பட்ட நபருடன், யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்கும் தொலைகாட்சி ஒன்றின் ஊடகவியலாளரான இவர்  முக புத்தகத்தில் நட்பில் இருந்தமை தொடர்பிலேயே பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இன்றைய தினம் கொழும்பிற்கு அழைத்து சுமார் மூன்று மணிநேர விசாரணையின் பின்னர் விடுத்துள்ளனர்.

Leave a Reply