பயங்கரவாத தடுப்புச்சட்டம் விலக்கப்பட வேண்டும் – சட்டத்தரணிகள் சங்கம்

இலங்கை அரசு புதிதாக கொண்டுவந்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இணையவளி பாதுகாப்புச் சட்டம் என்பன உடனடியாக மீளப்பெறப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த இரு சட்டங்களும் கடந்த 15 மற்றும் 18 ஆம் நாட்களில் வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அவை மக்களின் சுதந்திரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதிக்கும்.

சட்டத்தரணிகள் சங்கத்தை கலந்தாலோசிக்காது இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என அது மேலும் தெரிவித்துள்ளது.