பதவியை இராஜினாமா செய்த லொஹான் ரத்வத்தை

பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் பதவியை லொஹான் ரத்வத்த இராஜினாமா செய்துள்ளார்.

ஜனவரி 29ஆம் திகதியுடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் எஸ்.பி.ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லோகன் ரத்வத்தவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நியமித்தார்.

இந்நிலையில் குறித்த இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் எஸ்.பி.ஏக்கநாயக்க வெளியிட்ட விசேட வர்த்தமானியில் குறிப்பிட்டுள்ளார்.

லோகன் ரத்வத்த தொடர்ந்து பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.