பண மோசடி… பாலியல் அத்துமீறல்கள்- லண்டன் சாமியார் கைது

Junior Vikatan - 28 June 2023 - பண மோசடி... பாலியல் அத்துமீறல்கள்... சர்ச்சையில்  சிக்கிக் கைதான லண்டன் சாமியார்! | london samiyar saravana baba atrocities -  Vikatan

சரவண பாபா அப்பாவிப் பெண்களைக் குறிவைத்து, அவர்களை உளவியல்ரீதியாக அடிமைப்படுத்தி, பாலியல் இச்சைக்குப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

பிரேமானந்தா, நித்தியானந்தா, ஆசாராம் பாபு வரிசையில் பாலியல் சர்ச்சையில் வசமாகச் சிக்கியிருக்கிறார் ‘லண்டன் சாமியார்’ சரவண பாபா. இவரது பாலியல் அட்டூழியங்கள் லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்களிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பான புகாருடன் அவர்கள் நமக்கு அனுப்பிய வீடியோக்கள் ஒவ்வொன்றும் அச்சிலேற்ற முடியாத ஆபாச ரகம்.

இது குறித்து பெயர் வெளியிட வேண்டாம் எனும் கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய லண்டன் வாழ் இலங்கைத் தமிழர் ஒருவர், “பிரேமானந்தாவின் பாலியல் குற்றங்களைத் தோலுரித்ததே ஜூ.வி-தான். அந்த பிரேமானந்தாவுக்கு நெருக்கமான ஒருவரின் உறவினருக்கு லண்டனில் ஒரு வீடு இருக்கிறது. அங்குதான் இந்த சரவண பாபா தங்கியிருந்தார். கேரளாவைப் பூர்வீகமாகக்கொண்டவரான இவர், 2009 காலகட்டத்தில்தான் முதன்முதலாக லண்டனுக்கு வந்தார். இங்கிருக்கும் செல்போன் நிறுவனப் பிரமுகர் ஒருவரும், பிரபல ஹோட்டலின் ஃபிரான்சைஸ் அதிபர் ஒருவரும் சரவண பாபாவுக்கு ஆதரவளித்தனர் என அவர் தெரிவித்ததாக இந்தியாவின் பிரபல ஊடகமான ஜூனியன் விகடன் செய்தியில்  மேலும் பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி-ஜூனியன் விகடன்

https://www.vikatan.com/crime/gender/london-samiyar-saravana-baba-atrocities