பட்டினியை இஸ்ரேல் ஆயுதமாக பயன்படுத்துகின்றது – ஒக்ஸ்பாம்

பட்டினியை இஸ்ரேல் ஆயுதமாக பயன்படுத்திவருவதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஒக்ஸ்பாம் என்ற உதவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாம் அனுப்பிய உதவிப்பொருட்களில் 2 விகிதமே காசாவை சென்றடைந்துள்ளது. சண்டைக்கு முன்னர் தினமும் 104 பாரஊர்திகள்; அனுப்பப்படுவதுண்டு, ஆனால் தற்போது கடந்த வாரம் 62 பாரஊர்திகளே அனுமதிக்கப்பட்டன அதில் 30 பாரஊர்திகளே உணவை கொண்டுசென்றன.

இஸ்ரேல் அனைத்துலகவிதிகளை மீறிவருகின்றது 2007 ஆம் ஆண்டில் இருந்து அங்கு தடைகள் நடைமுறையில் உள்ளன. தற்போது முழுஅளவில் அது முடக்கப்பட்டுள்ளது என அதன் மத்திய கிழக்கிற்கான பணிப்பாளர் சாலி அபி ஹாலி தெரிவித்துள்ளார்.