படைமயமாகும் சிவில் நிருவாகம்; சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரி

201 Views

சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கொரோனா தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முற்றுமுழுதாக முப்படையினரை ஈடுபடுத்தி வந்த நிலையில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்  சஞ்ஜீவ முனசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை அரசாங்கத்தில் படையினரின் செல்வாக்கு மேலோங்கி நிற்பதாக அனைத்துலக மனிதவுரிமை அமைப்புகளை குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply