நீதி வழங்க அரசாங்கம் தவறினால் நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறும் -பேராயர் ரஞ்சித் ஆண்டகை

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க அரசாங்கம் தவறினால் நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறும் என பேராயர் கர்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மேலும் ஆணைக்குழுவால் குற்றவாளிகள் என பெயரிடப்பட்டவர்கள் மீது  அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சம்பவத்திற்கு நீதி வழங்கப்படும்வரை பொதுமக்கள் தரப்பில் எப்போதும் நிற்பேன் என்றும் கர்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.