நீதி மன்றத் தீர்ப்பையும் மீறி பிக்குவின் சடலத்தை புதைக்கும் முயற்சியில் சிங்களவர்கள்

679 Views

புற்றுநோய் காரணமாக உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவு பழைய செம்மலைக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகே உள்ள கடற்கரையில் தகனம் செய்ய அறிவுறுத்திய நீதிமன்றம், பிக்குவின் சமாதி அமைப்பதற்கு தடை விதித்து கட்டளையிட்டது.

நீதிமன்றம் கடற்கரையாக உள்ள இடத்தில் இறுதிக்கிரியைகள் செய்யுமாறு தீர்ப்பு வழங்கியுள்ளபோதிலும், நீராவிடியடி பிள்ளையார் ஆலயத்திற்குப் பின்புறமாகவுள்ள குளக்கரையில் புற்றுநோயால் இறந்த பிக்குவின் சடலத்தைப் புதைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

நேற்றைய தினம் இப்போது கிடங்கு வெட்டிக்கொண்டிருக்கும் இதே குளக்கரை பகுதியில் பிக்குவுக்கான இறுதிக் கிரியைகளை செய்ய ஆலயத்தினருடன் பிக்குமார் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தனர்.

அதன்போது, ஆலயத்தினர், இங்கு செய்யமுடியாது. நீதிமன்ற தீர்ப்பின்படி செய்துகொள்வோம் என உறுதியாகக் கூறிவிட்டனர். அதன்படி நீதிமன்ற தீர்ப்பு கடற்கரையாக இறுதிக்கிரியைகளை செய்யும்படி பணித்தும், அதைக் கிஞ்சித்தும் மதிக்காமல், ஆலயத்தை அண்டிய குளக்கரை பகுதியிலேயே இறுதிக்கிரியைக்குரிய ஏற்பாடுகளை செய்கின்றனர்.

 

 

Leave a Reply