நீதிபதியை அச்சுறுத்தியமை தொடர்பில் திருமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்

முல்லைத் தீவு மாவட்ட நீதிபதிக்கு அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினார் இது தொடர்பில் நீதித் துறை சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் இன்று (03)திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்துக்கு  முன்னால் கவனயீர்ப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

Trinco Lawyears நீதிபதியை அச்சுறுத்தியமை தொடர்பில் திருமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்இதனை திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.நீதி தூறையை சுயமாக இயங்கவிடு, சட்ட ஆட்சியை நிலை நிறுத்து உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை  ஏந்தியவாறும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

நாட்டில் நீதி சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் நீதிபதி அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதால் நீதியை நிலை நாட்ட முடியாமல் போகும் எனவும் கவனயீர்ப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இதில் பல சட்டத்தரணிகள் கலந்து கொண்டு தங்களது நியாயமான  கோரிக்கைகளை முன்வைத்தனர்.