நியுயோக் ஐ.நா முன்றலில் பெரும் திரளான தமிழர்கள் ரணிலுக்கெதிராக போராட்டம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரனின் தலைமையில் நியுயோக் ஐ.நா முன்றலில் பெரும் திரளான தமிழர்கள் ரணிலுக்கெதிராக தமிழீழத் தேசியக் கொடியுடன் போராட்டம் ஒன்றை கடந்த வியாழக்கிழமை (21) முன்னெடுத்திருந்தனர்..

போராட்டம் காரணமாக ரணில் பின்கதவால் ஐ.நாவை விட்டு வெளியேறினார்.

  • தியாகி திலீபனின் ஊர்தியை சிங்கக் கொடி கொண்டு அடித்து நொருக்கிய சிங்கள பொளத்த இனவெறி அரசு ரணில் அரசு.
  • ரணிலே வெளியேறு, காணாமல் ஆக்கப்பட்வர்கள் எங்கே?
  • சிங்களதேசமே இனப்படு கொலை செய்தது,
  • ரணில் ஐ.நாவுக்கு வருவது ஐ.நாவுக்கு அவமானம்.
  • இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து.

போன்ற முழக்கங்கள் போராட்டக்கார்ர்களால் உரத்து ஒலித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரமர் உருத்திரகுமாரன் பேசுகையில் நிதரந்தர அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பின் முக்கியத்துவத்தையும் கூறியது மட்டுமல்ல இலங்கையின் உண்மைக்கும், நீதிக்குமான ஆனைக்குழு தமிழர்களை ஏமாற்றுவதற்கான சதித்திட்டமே என்று கூறினார்.

மேலும் பொளத்த மயமாக்கால் , சிங்களக் குடியேற்றம் ஆகிய வற்றில் ஐ. நா தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்தப் போராட்டத்தை ஐ.நா அதிகாரிகளும், வெளிநாட்டு இராஐதந்திரிகளும் மற்றும் சர்வதேச பத்திரிகையாளர்களும் அவதானித்ததுடன் புகைப்படங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.