நாடுகடத்தலுக்கு எதிரான போராட்டம் ஜேர்மனியில் 2வது நாளாகத் தொடர்கிறது

ஜேர்மனியிலிருந்து இவ்வருடம் இரண்டாவது முறையாக நாளை 9/6/2021 இல் ஈழத்தமிழ் அகதிகள் நாடு கடத்தப்படவுள்ள பின்புலத்தில் பிரேமன் மனித உரிமைகள் அமைப்பு, வேறு பல மனித உரிமைகள் அமைப்புகளுடன் இணைந்து ஜேர்மனியின் (வ்)போட்சைம் (Pforzheim) நகரில் நாடுகடத்தப்படவுள்ள அகதிகளில் ஒரு சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமுக்கு முன்   ஓர் எதிர்ப்புப் போராட்டத்தை நேற்று மாலையிலிருந்து முன்னெடுத்து வருகிறது.

பிரேமன் மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த விராஜ் மென்டிஸ் எடுத்த முயற்சியில் நாளை நாடுகடத்தப்படவிருந்த செல்வன் செல்லத்துரை என்ற தமிழ் அகதி தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்

நாளை மதியம் வரை தொடர்ந்து நடைபெறும் போராட்டத்தில் ஜேர்மன் நாட்டு மக்களும் பங்கெடுத்து வருவது கவனிக்கத்தக்கதாகும்.

இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி ஏறக்குறைய 25 ஈழத்தமிழ் அகதிகளைப் பலத்த எதிர்ப்புகளின் நடுவிலும் ஜேர்மனி நாடுகடத்தியிருந்தது.

Leave a Reply