நாடாளுமன்ற கலைப்பிற்கான காலத்தை சபாநாயகர் வெளியிட்டார்

964 Views

இன்றிலிருந்து(30) 6 மாதத்திற்கு பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க முடியுமென சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நவீன ஊடக மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வின் போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நடைபெறும் செயற்பாடுகள் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும்.

இதன் காரணமாகவே நாடாளுமன்ற அமர்வுகளை வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடாக ஒலிபரப்புவதற்கு தீர்மானம் மேற்கொண்டோம். அத்தீர்மானம் வெற்றி அளித்துள்ளது என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார். உலக  நாடாளுமன்றங்களிடையே இலங்கை நாடாளுமன்றம் சிறப்பம்சம் கொண்ட ஒரு நாடாளுமன்றமாகவும் திகழ்கின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply