நாடாளுமன்றம் மீள் வருகை குறித்து ரணில் கருத்து

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜூன் 22ஆம் திகதியன்று தேசிய பட்டியல்  நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றம் மீள் வருகை குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறுகையில்,

“நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. தனிநபர் பொருளாதாரத்தை வலுப்படுத்தாது தேசிய பொருளாதாரம் வலுக்காது. எனவே தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். கோவிட் நெருக்கடி, பொருளாதார பாதிப்பு, இயற்கை அழிவு மற்றும் கப்பல் விபத்து என இலங்கையை சூழ பிரச்சினைகளே உள்ளன.

எனவே யாருடைய குறைகளையும்  நாம் கூற வேண்டியதில்லை.  மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கே நான் நாடாளுமன்றம் செல்கின்றேன்” என்று  தெரிவித்துள்ளார்.