‘நாடகம் வேண்டாம் எரிபொருள் விலையை உடனே குறை’ – திருகோணமலையில் கவனயீர்ப்பு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் திருகோணமலை மத்திய பேரூத்து நிலையத்திற்கு முன்னால் இன்று  கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர். மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  மரத்தில் இருந்து விழுந்தவரை மாடு முட்டுவது போல,  எரிபொருட்களின் விலையை அரசாங்கம் அதிகரித்துள்ளது.

20210623 110858 'நாடகம் வேண்டாம் எரிபொருள் விலையை உடனே குறை' - திருகோணமலையில் கவனயீர்ப்பு

எம் மக்களை எண்ணெயில் வாட்டி வாழ்க்கை செலவு வானை நோக்கி,  அமைச்சர் அவர்கள் நாடகத்தில் சொகுசு வாகன கனவினிலே.

20210623 111031 'நாடகம் வேண்டாம் எரிபொருள் விலையை உடனே குறை' - திருகோணமலையில் கவனயீர்ப்பு

போனமாதம் விலை குறைய விலை கட்டுப்பாடு நிதியத்தினில் வைப்பிலிட்டு பல கோடிக்கு நடந்ததென்ன தெரியவில்லை!

அரிசி விலைக்கு ஐந்து கசட் தேங்காய் எண்ணெய் விலையேற்றம் சிலிண்டரில் காஸ் குறைவு குறையவில்லை விலை மட்டும்!

20210623 111140 'நாடகம் வேண்டாம் எரிபொருள் விலையை உடனே குறை' - திருகோணமலையில் கவனயீர்ப்பு

மீனும் விலை மாவும் விலை மக்களுக்கு போதும் இது ஜனாதிபதியின் அறிவுரைகள் சொல்வது ஒன்று நடப்பதொன்று எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Leave a Reply