தொண்டர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கி வைப்பு

IMG 20240608 WA0046 தொண்டர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கி வைப்புதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய தமிழ் கிராமங்களில் அமைந்துள்ள பல பாடசாலைகளில் கணினி, கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் இல்லாத சூழல் நிலவுகின்றது. அந்தவகையில் வெருகல் கோட்டத்தில் உள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரி, திருவள்ளுவர் வித்தியாலயம் மற்றும் துவாரகா வித்தியாலயம்; மூதூர் வலையத்தில் உள்ள கங்குவேலி அகத்தியர் வித்தியாலயம், இலிங்கபுரம் தமிழ் வித்தியாலயம் மற்றும் ஆதியம்மன் கேணி தமிழ் வித்தியாலயம்; மொறவெவ கோட்டத்தில் உள்ள அவ்வை நகர் தமிழ் வித்தியாலயம்; குச்சவெளிக் கோட்டத்தில் உள்ள திரியாய்த் தமிழ் மகாவித்தியாலயம் மற்றும் விவேகானந்தா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு கணிதம், கணினி மற்றும் அறிவியல் கற்பிக்க ஆசிரியர் இல்லை. தமிழ் மாணவரது கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகக் கல்வித் துறையின் வேண்டுகோளுக்கமைய திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் மேற்படி பாடசாலைகளுக்குத் தொண்டர் ஆசிரியர்களை நியமித்து மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கி வருகின்றது.

 

இரு மாதக் மாதக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது. திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் கதிர்வேலு சண்முகம் குகதாசன், செயளாலர் கணபதிப்பிள்ளை சிவானந்தன்,பொருளாளர் இராசரத்தினம் கோகுலதாசன் ஆகியோர் இக்கொடுப்பனவுகளை வழங்கினர்.