தேர்தல் பெரிய பிரித்தானியாவை சிறிய இங்கிலாந்து ஆக்குமா? வேல் தர்மா

மேற்கு நாடுகளில் தேர்தல் வெற்றியை முடிவு செய்பவை கட்சிகளுக்கு கிடைக்கும் நிதியும் ஊடக ஆதரவுமே. 2019 நவமபர் கடைசி வாரத்தில் பழமைவாதக் கட்சி 3.6மில்லியன் பவுண்களையும், தொழிற்கட்சி 522,000 பவுண்களையும் தாராண்மை மக்களாட்சிக் கட்சி 510,000 பவுண்களையும் சேகரித்தன.

அதிக விற்பனையுள்ள அச்சு ஊடகங்கள் பழமைவாதக் கட்சிக்கு எப்போதும் பேராதரவு வழங்கும். பிரித்தானியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கு 650 உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் 2019 டிசம்பர் 12-ம் திகதி நடக்கவிருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேறுவது, தேசிய சுகாதார சேவை, பொருளாதாரம், உள்நாட்டுப்பாதுகாப்பு போன்றவை தேர்தலில் அதிகம் விவாதிக்கப்படுகின்றன.

இரு கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் பல கட்சி அரசியல்

பழமைவாதக் கட்சியும் (Conservative Party) தொழிற்கட்சியும் (Labour Party) பிரித்தானிய அரசியலில் முக்கிய பங்கு வகித்தாலும் மூன்றாம் கட்சியான தராண்மை மக்களாட்சிக் கட்சியும் (Liberal Democratic Party) காத்திரமான பங்கு வகிக்கின்றன. skynews general election 2019 4820132 தேர்தல் பெரிய பிரித்தானியாவை சிறிய இங்கிலாந்து ஆக்குமா? வேல் தர்மா

பிராந்தியக் கட்சிகளான ஸ்கொட்லாந்து தேசியவாதக் கட்சி, வேல்ஸ் தேசியவாதக் கட்சி, சின்ஃபெயின், அதி ஒன்றியவாதக் கட்சி ஆகியவையும் இருக்கின்றன. பிறெக்சிற் கட்சி போட்டியிடுவது பழமைவாதக் கட்சியின் வாக்குகளைப் பிரிப்பதுடன் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதில் தடங்கல்களை ஏற்படுத்தலாம் என்பதை பிறெக்சிற் கட்சியினரே உணர்ந்துள்ளனர். அக்கட்சியின் நான்கு ஐரோப்பியப் பாராளமன்ற உறுப்பினர்கள் பழமைவாதக் கட்சிக்கு தாவியுள்ளனர்.

பிரிவெளியேற்றம் (பிறெக்க்சிற்)

கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் மூன்று தேர்தலைச் சந்தித்த பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது என்ற பிரச்சனையால் இரண்டு தலைமை அமைச்சர்கள் பதவி விலகினர். பிரித்தானியாவை எப்படியாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகச் செய்வேன் என்ற வாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பழமைவாதக் கட்சியின் தலைவர் பொறிஸ் ஜோன்சன் பரப்புரை செய்கின்றார். தீவிர இடது சாரிக் கொள்கையை முன்வைத்து பரப்புரை செய்யும் ஜெரமி கோபின் தலைமையிலான தொழிற்கட்சியினர் பிரிவெளியேற்றம் தொடர்பாக இரண்டாம் கருத்துக் கணிப்பு நடத்தப்படும் என்கின்றனர். பிரிவெளியேற்றம் தொடர்பாக தான் நடு நிலை வகிப்பதாக ஜெரமி கோபின் கூறுகின்றார். தாராண்மைவாத மக்களாட்சிக் கட்சியும் ஸ்கொட்லாந்து தேசியவாதக் கட்சியும் பிரிவெளியேற்றத்தை தடுப்பதாகப் பரப்புரை செய்கின்றன.

தேசிய சுகாதார சேவை

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையை அமெரிக்காவிற்கு அயலாக்கம் (outsourcing) செய்யும் சதியை பழமைவாதக் கட்சி செய்வதாக தொழிற்கட்சி குற்றம் சாட்டுகின்றது. 2019/20இற்கான நிதியாண்டில் 134பில்லியன் பவுண் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சுகாதார சேவை அமெரிக்க முதலாளிகள் பெரும் இலாபம் ஈட்டக்கூடிய ஒரு துறையாகும். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின்னர் அமெரிக்க முதலாளிகள் அதில் சுரண்டல் செய்ய பழமைவாதக் கட்சி வாய்ப்பளிக்கும் என தொழிற்கட்சி குற்றம் சாட்டுகின்றது. அதனால் தாம் தேர்தலில் வெற்றி பெற்றால் தேசிய சுகாதார சேவை விற்பனைக்கு விடப்பட மாட்டாது என்ற விளம்பரத்தை பழமைவாதக் கட்சி தீவிரமாகச் செய்கின்றது.

பொருளாதாரம்

பிரித்தானிய மக்கள் தொகையின் 10% மக்கள் அதன் செல்வத்தில் 45% கொண்டிருக்க அரைப்பங்கு மக்கள் அதன் செல்வத்தின் 9% மட்டும் வைத்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான இடைவெளி பாரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது. இதை தொழிற்கட்சி ஜெரமி கோபினின் தலைமையிலான ஆட்சி மாற்றியமைக்கலாம். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்தால் அதிகவரி விதிப்புச் செய்து அதிக செலவுகளைச் செய்வார் என்பதனால் அவரது ஆட்சியில் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்கின்றனர் மாற்றுக் கட்சியினர். கருத்துக் கணிப்பில் பழமைவாதக் கட்சி முன்னணியில் இருப்பதனால் பிரித்தானிய நாணயமான பவுணின் பெறுமதி அதிகரித்துள்ளது.

தற்போது 150,000 பவுண்களுக்கு மேல் வருமானம் உடையவர்கள் மட்டும் 45% வருமான வரியைச் செலுத்துகின்றனர். இதை 80,000 பவுண்களாகக் குறைக்கப் போவதாக தொழிற் கட்சி அறிவித்துள்ளது. தற்போது 20% ஆக இருக்கும் முலதன வருமான வரையை ஐம்பது விழுக்காடாக தொழிற்கட்சி அதிகரிக்கும். அத்துடன் வாரிசு உரிமை வரியிலும் பாரிய அதிகரிப்பை தொழிற்கட்சி செய்யும் என அறிவித்துள்ளது. இவற்றால் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் இலண்டன் பங்குச் சுட்டி பத்து விழுக்காட்டால் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளை பழமைவாதக் கட்சி ஆட்சிக்கு வந்தால் பங்குச் சந்தைச் சுட்டிகள் சிறிதளவு வளர்ச்சியை மட்டுமே அடையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் தேர்தலின் பின்னர் பிரித்தானியப் பொருளாதாரம் பல சவால்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

தமிழர்களின் நிலைமை

இலங்கையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை தொழிற்கட்சியின் ஆட்சி அங்கீகரிக்கும் என ஜெரமி கோபின் தன்னைச் சந்தித்த தமிழர்களிடம் உறுதியளித்துள்ளார். மேற்கு நாடுகளில் ஆட்சி மாறினாலும் அதன் வெளியுறவுக் கொள்கையை இலகுவில் மாற்ற முடியாது என தமிழர்கள் சுட்டிக் காட்டியபோது அந்த வழமையை தான் மாற்றுவேன் என கோபின் சூளுரைத்தார். இதுவரை காலமும் பிரித்தானியாவில் தமிழர்களின் போராட்டங்களில் ஜெரமி கோபின் அளித்த பங்கு போல் வேறு எந்த தமிழர்களும் அளித்ததில்லை.jeramy தேர்தல் பெரிய பிரித்தானியாவை சிறிய இங்கிலாந்து ஆக்குமா? வேல் தர்மா

ஆனால் சில தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் தாம் அதிக வரி செலுத்த வேண்டும்; அதனால் தாம் அதற்கு வாக்களிக்கப் போவதில்லை என என்னிடமே தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் பல தமிழர்கள் குட்டிக் குபேரர்களாகிவிட்டனர். பல அப்படி வருவதற்கு தீவிரமாக முயன்று கொண்டிருக்கின்றனர்.

புலப்படா உலகப்பெரு வல்லரசு பெரு-வல்லரசுகள் மற்ற நாடுகளில் ஆட்சிமாற்றத்தை தமக்கு ஏற்றபடி மாற்றும். ஆனால் பெரு-வல்லரசுகளில் ஆட்சியை தமக்கு ஏற்ப மாற்றியமைக்கும் புலப்படா-உலகப்பெரு-வல்லரசு ஒன்று செயற்பட்டுக் கொண்டிருப்பதை பலரும் உணரவில்லை. பலஸ்த்தீனியர்களின் தனி நாட்டை தான் அங்கிகரிப்பேன் என ஜெரமி கோபின் பகிரங்கமாக அறிவித்துள்ளார். அதனால் அவரை ஆட்சிக்கு வராமல் தடுக்கும் தீவிர முயற்ச்சியில் உலக யூதப் பெரும் செல்வந்தர்கள் ஈடுபடுவார்கள்.

தேர்தலின் பின்னர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால் ஸ்கொட்லாந்தும் வட அயர்லாந்தும் பிரித்தானிய ஒன்றியத்தில் இருந்து விலகலாம். வேல்ஸும் அதே வழியில் செல்ல இங்கிலாந்து தனைத்து நிற்கவேண்டிய நிலை ஏற்படலாம்.