கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் சுவிஸ் தூதரக அதிகாரிகளுக்கிடையிளான கலந்துரையாடல் கொழும்பில் உள்ள சுவிஸ் நாட்டுக்கான இலங்கை தூதரகத்தில் நேற்று (05) இடம் பெற்றது.
குறித்த சந்திப்பின் போது தற்காலிக அரசியல் நிலவரம் மற்றும் எதிர்வரக்கூடிய தேர்தல்களின் போது கபே அமைப்பின் கண்காணிப்பு திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதில் கபே அமைப்பு சார்பாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் மற்றும் நிர்வாக பணிப்பாளர் சுரங்கீ ஆரியவன்ஷ ஆகியோரும். சுவிஸ் தூதரகம் சார்பாக அதன் முதல் செயலாளர் ஜஸ்டின் பொலெட் மற்றும் அதன் அதிகாரிகளான கணிஷ்க ரத்ணப்பிரிய மற்றும் மெலீணா ஆகியோரும் களந்து கொண்டனர்.