தேர்தலுக்குள் கச்சதீவை மீட்டு கொடுத்தால் நானும் எனது கட்சியினரும் பா.ஜ.கவுக்கு வாக்களிக்கிறோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பவன் நான் மட்டுமே. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கட்சிக்கு ஆதரவான காங்கிரஸ், தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றும் கூறினார்.
தேனியில் பிரசாரத்தில் “சின்னம் முடக்கப்பட்ட போதும் எண்ணத்தை மாற்ற முடியாது என்ற அடிப்படை யில் அவர்கள் கொடுத்த சின்னத்துடன் களத்தில் நிற்கிறோம். தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா பெரிய கட்சி என்கின்றனர். ஆனால் தனித்து நிற்கபயப் படுகின்றனர்.
“கச்சதீவை மீட்காமல் 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்து விட்டு 10 நாட்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் இதுபற்றி பா.ஜ.க. பேசி வருகிறது. நான் 13 ஆண்டுகளாக கச்சதீவை பற்றி பேசி வருகிறேன். 6 மாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு இது குறித்து கடிதம் எழுதினேன். தேர்தலுக்குள் கச்சதீவை மீட்டு கொடுத்தால் நானும் எனது கட்சியினரும் பா.ஜ.கவுக்கு வாக்களிக்கிறோம்” என்றும் அவா் தெரிவித்தாா்.