தேசிய புலனாய்வுத் துறை பணிப்பாளராக நியமனம்பெறும் படைத்துறை அதிகாரி

தேசிய புலனாய்வுத் துறைக்கான புதிய பணிப்பாளராக பிரிகேடியர் சுரேஸ் சலெய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கு முன்னர் அதன் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயரத்ன பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய புலனாய்வுத் துறைக்கு பணிப்பாளராக இராணுவ அதிகாரியொருவரை நியமித்துள்ளமை இதுவே முதற்தடவை என தெரிவிக்கப்படுகின்றது.