தேசிய தொழிற்தகைமை திறன் விருத்தி தொடர்பிலான பயிற்சி செயலமர்வு

தொழில்வாய்ப்பினை எதிர்பார்ப்பவர்களுக்கான திறன் விருத்தி தொடர்பிலான செயலமர்வொன்று தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (24)இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த நிகழ்வினை  மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.
Trinco workshop தேசிய தொழிற்தகைமை திறன் விருத்தி தொடர்பிலான பயிற்சி செயலமர்வு இதில் திறன் விருத்தி பயிற்சிகள் தொடர்பாகவும் அதற்காக  RPL  முறை மூலமாக தேசிய தொழிற் தகைமை சான்றிதழ்( NVQ  ) பெறுதல் தொடர்பான வழிகாட்டலும் இடம் பெற்றன.
 இதில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், நைட்டா நிறுவன உத்தியோகத்தர் மற்றும் மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்