தேசியத் தலைவர் பிறந்தநாளை நள்ளிரவு கொண்டாடிய யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

423 Views

தமிழீழத் தேசியத் தலைவரின் 65ஆவது பிறந்த நாளை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நள்ளிரவு 12 மணியளவில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இவர்களின் இந்த செயல் யாழ். மக்களின் மனதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் பகுதியில் மாவீரர் நினைவு தின நிகழ்வை தடுக்கும் நோக்குடன் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டு, கெடுபிடிகளை மேற்கொண்டு வரும் இவ்வேளையில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தலைவரின் பிறந்த தினத்தை உணர்வோடு கொண்டாடியுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தலைவரின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடி வருவது வழக்கம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply