தென்பகுதி குடும்பஸ்தர் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு கொக்குளாய் கிழக்கு வில்லுக்குளத்தில் இருந்து தென்பகுதியினை சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர் இன்று 23.01.2020 அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாஎல பகுதியினை சேர்ந்த 36 அகவையுடைய மொகஸ்ரீன் கிறிஸ்தோபர் என்ற குடும்பஸ்தர் கொக்குளாய் கிழக்கு பகுதியில் கடற்தொழில் செய்துவந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அவரை காணவில்லை என கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் இன்று காலை வில்லுக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது சடலம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கொக்குளாய் பொலிசார்,தடையவியல் பொலிசார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை மரணவிசாரணை அதிகாரி க.ரதிநாதன்,கிராமசேவகர்கள் ஆகியோர் சடலத்தினை மீட்டுள்ளார்கள்.

சடலம் பிரேத பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு பிரதேச பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்