தென்னிந்திய நடிகர் தலைவர் பிரபாகரனின் வீட்டிற்கு சென்று வந்தது தொடர்பாக பாதுகாப்புப் படையினர் விசாரணை

570 Views

யாழ்ப்பாணத்திற்குச் சென்று விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் வீட்டைப் பார்வையிட்ட தென்னிந்திய நடிகர் சதீஸ் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வல்வெட்டித்துறையிலுள்ள தேசியத் தலைவர் பிரபாகரனின் வீட்டிற்குச் சென்ற நடிகர் சதீஸ் அழுததாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்ததுடன், அவர் அங்கு நின்று எடுத்த புகைப்படங்களும் வெளியிடப்பட்டிருந்தன.

இது தொடர்பாக யாழ்ப்பாண பாதுகாப்புப் பிரிவினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.  என்ன நோக்கத்திற்காக அவர் அங்கு சென்றார்? அவரை யார் யாழ்ப்பாணம் அழைத்துச் வந்தார்கள்? என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

“நான் அங்கு சென்று பிரபாகரன் ஐயா வாழ்ந்த வீட்டிற்கு சென்று பார்த்தேன். என்னால் அழுகையைத் தவிர்க்க முடியவில்லை” என அவர் ஊடகத்திற்கு தகவல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக தென்னிந்திய திரைப்பட பிரபலங்கள் பலர் யாழ்ப்பாணம் சென்று வருகின்றனர். அங்கு நல்லூர் கந்தசாமி கோவில் மற்றும் பல இடங்களில் நின்று படங்கள் எடுத்ததுடன், ஊடகங்களுக்கு பேட்டிகளும் வழங்கி வருகின்றனர்.

யாழ்ப்பாண மக்கள் பற்றியும், அவர்களின் தூய தமிழ் பற்றியும், யாழ்ப்பாணத்தின் மீதும், அங்குள்ள மக்கள் மீதும் தான் பற்றுக் கொண்டிருப்பதாக அண்மையில் அங்கு சென்றிருந்த தென்னிந்திய நடிகரும், அவரின் மனைவியும் ஊடகத்தில் பேட்டி வழங்கியிருந்தனர்.

sathees2 தென்னிந்திய நடிகர் தலைவர் பிரபாகரனின் வீட்டிற்கு சென்று வந்தது தொடர்பாக பாதுகாப்புப் படையினர் விசாரணைஇவர்கள் ஒருவர் மீதும் விசாரணை மேற்கொள்ளாத பாதுகாப்பு படையினர், நடிகர் சதீஸ் தேசியத் தலைவர் பிரபாகரன் வீட்டிற்கு சென்றதற்காக விசாரணையை மேற்கொள்கின்றனர் என்பது இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டியுள்ளது.

Leave a Reply