தீர்மானங்கள் அதிகாரங்களை அச்சுறுத்த முடியவில்லை – வன்னி அரசு

சீனாவுக்கு எதிரான ஹாங்காங் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறார் அந்நாட்டின் ஜனாதிபதி ட்ரம்ப். ஹாங்காங் தேசத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், போராட்டக்கார ர்கள் காணாலடிக்கடுவதாகவும் ட்ரம்ப் கவலையோடு ஹாங்காங் மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் சட்டம்- 2019 இயற்றி இருக்கிறார்.

இதன் மூலம் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வெளிப்படையாக களமிறங்கி இருக்கிறது.இந்த செயல்பாட்டுக்கு சீனா அமெரிக்காவை கடுமையாக எச்சரித்துள்ளது. ஆனாலும் ட்ரம்ப் சீனாவை ஒரு பொருட்டாக கூட மதித்ததாக தெரியவில்லை.

என்ன நடக்கும்?

ஹாங்காங் மக்கள் மீது அமெரிக்காவுக்கு அப்படி என்ன அக்கறை?

எதுவுமே இல்லை. சீனாவை அச்சுறுத்தவே இந்த மசோதா. இந்த மசோதாவால் எந்த மாற்றமும் சீனாவில் நடக்கப்போவதில்லை.இப்படித்தான் இலங்கை மீது ஐநாவை வைத்து ஒரு தீர்மானம் இயற்றியது அமெரிக்கா. இப்போது என்னவாயிற்று?

2015 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாளில் இதே அமெரிக்க உதவியோடு தான் இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே இனப்படுகொலை குற்றவாளி என்று ஐநா அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் மனித உரிமைகள், தமிழினப்படுகொலைகள், போர் விதிமீறல் இப்படி அந்த தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு எதிராக குற்றப்பட்டியல் படிக்கப்பட்டது.

நேற்றைக்கு இந்தியா வந்த கோத்தபய ராஜபக்சே, “ஐநா தீர்மானம் குறித்து யாரும் பேசக்கூடாது. எந்த அந்நிய நாடும் எங்களை அழுத்தம் தரக்கூடாது” என்று வெளிப்படையாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் கோத்தபய.

எந்த தீர்வையும், எந்த விடிவையும் தராத இந்த தீர்மானங்கள் எதற்கு? ஐநா அவை எதற்கு? அதிகாரங்கள் மட்டுமே தீர்மானிக்கின்றன. தீர்மானங்கள் அதிகாரங்களை அச்சுறுத்த முடியவில்லை.

சீனாவை அமெரிக்கா அச்சுறுத்துகிறது. இந்தியாவை சீனா அச்சுறுத்துகிறது. இலங்கை சீனாவுக்கு பின்னிருந்து ஐநாவை அச்சுறுத்துகிறது. அமெரிக்கா உலகை அச்சுறுத்தி வருகிறது.

ஆனால், ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தங்களுடைய விடுதலைக்காக
இந்த அரச பயங்கரவாதங்களை எதிர்த்து போராடிக்கொண்டே இருக்கின்றன.