கொழும்பிலும் அதன் சுற்றுப்புற நகர்களிலும் 36 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கோரிக்கைகளுக்காக அகிம்சைவழியில் போராடி உயிர் துறந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் தியாகி லெப். கேணல் திலீபனை ஜனநாயக வழிகளில் நினைவுகூர்வதற்கு இலங்கை நீதிமன்றம் மக்களுக்கு தடை விதித்துள்ளது.
பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் கோரிக்கைகளுக்கு எதிராக இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட முறைப்பாடுகளையே இலங்கை நீதிமன்றம் கருத்தில் எடுத்துள்ளது.
போரில் இறந்தவர்களை நினைவுகூர்வதற்கு அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு விடுத்த வேண்டுகோளையும் இலங்கை நீதிமன்றம் புறக்கணித்துள்ளது.