திருப்பலி பீட அபிஷேக திருவிழா

திருகோணமலை மறை மாவட்டத்திலுள்ள கன்னியா கிறிஸ்து அரசர் ஆலய திருப்பலி பீட அபிஷேக திருவிழா 24-09-2023 ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவுள்ளது.

இவ்வாலயமானது 1984 ஆம் ஆண்டளவில்  சிறு ஓலை குடிசையாக அமையப்பெற்றறிருந்தது. பின்னர் சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து 2004ம் ஆண்டில் அருட்தந்தை லீயோ அவர்களின் அயராத முயற்சியினால்  இவ்வாலயம்  கட்டிடமாக புதுப்பிக்கப்பட்டது.

அதன்பிறகு பொறுப்பேற்ற அருட்பணியளர்களும் இதன் வளர்சிக்கு பங்களிப்பை வழங்கியிருந்தனர். தற்போது இப்பங்கில் 69 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவ்வாலய சுற்றுசூழல் துப்பரவு செய்யப்பட்டு

இதன் திருப்பலி பீடமானது ஞாயிற்றுக்கிழமை ( 24-09-2023)  மாலை 5 மணிக்கு திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய

கலாநிதி “கிறஸ்டியன் நோயல் இம்மானுவேல்” ஆண்டகையினால் பீட அபிஷேகம் செய்யப்படவுள்ளது.

நிகழ்வில் பங்குகொண்டு கிறிஸ்து அரசரின் ஆசிபெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.