திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் (14) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் ஏ.கே. அப்துல் ஜப்பார்,மாவட்ட செயலக விவசாய பணிப்பாளர் Dr. டி.கருணைநாதன், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.