திருகோணமலை மாவட்ட செயலகத்தில் டெங்கு குழுக்கூட்டம்

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் டெங்கு குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில்  (14) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் ஆண்டு வாரியாக டெங்கு நோய் பரவலும் மக்களின் எண்ணிக்கையும், கடந்த 10 ஆண்டுகளில் டெங்கு வழக்குகள், மாவட்டத்தில் டெங்கின் நிலைமை ( வழக்குகளும் இறப்புக்களும்),  டெங்கின் தற்போதைய போக்கு போன்ற பல விடயங்கள் திருகோணமலை சுகாதார சேவைகளின் பிராந்திய பணிப்பாளர் டொக்டர் வி.பிரேமானந்த் மற்றும் பூச்சியியல் அதிகாரியினாலும் எடுத்து கூறப்பட்டது.
மேலும் பூச்சியியல் கண்காணிப்பு என்றால் என்ன , நோக்கங்கள், இனப்பெருக்கம் செய்யும் இடங்கள், டெங்குவை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தொடர்பான நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இக் கூட்டத்தில் மேலதிக  மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள் , துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.