திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் கேதார கெளரி விரதம்..!

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் கேதார கெளரி விரதம் மிகவும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது.
இவ் விரதம் 24-10 -2023 செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து 13 -11-2023 திங்கட்கிழமை கூடிய அமாவாசைத் தினத்தன்று நிறைவு பெறுகின்றது.
இருபத்தொரு நாள் அனுஸ்டிக்கப்படும் இவ் விரதத்தில் கடைசி நாளன்று காலை 7.00 மணிக்கு திருக்காப்பு பூஜை ஆரம்பமாகும்.
விரத அன்பர்கள் அனைவரும்  அன்றைய தினம்  குறித்த நேரத்திற்கு வருகை தந்து அம்பாளின் திருவருளைப் பெற்று பற்றுச்சீட்டினைச் செலுத்தி புனித திருக்காப்பை பெற்று கையில் அனிந்து கொள்ள முடியும் என திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் ஆதின கர்த்தாவும் பிரதம குருவுமான பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திரக் குருக்கள் அறிவித்துள்ளார்.