திருகோணமலை துறைமுகத்திற்கு வந்த இந்தியக் கப்பல்

இந்தியாவின் கடற்படைக் கப்பல் ஒன்று நேற்று(25) திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பயிற்சி நோக்கத்திற்காகவே இக்கப்பல் வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படைக் கப்பலான ‘நிரீக்ஷக்’ என்ற கப்பல் பயிற்சிக்காக திருகோணமலை கடற்கரையை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பலை கடற்படை நடைமுறைகளுக்கேற்ப இலங்கைக் கடற்படையினர் வரவேற்றனர்.

கப்பல் துறைமுகத்தை வந்தடைந்ததும், கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் பெக்கி பிரசாந்த், கிழக்குக் கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். அப்போது இச்சந்திப்பின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.