திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தினால் மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்வு திருகோணமலை நகரசபை பொது நூலக மண்டபத்தில் இன்று (15) காலை 9.30 மணிக்கு விசேட தேவையுடையோருக்கான சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். கெளரிசாந் தலைமையில் இடம் பெற்றது.
இவ் நிகழ்வில் திருகோணமலை நகரசபையின் செயலாளர் வெ. இராஜசேகர் , மாவட்ட சமூக சேவை இனைப்பாளர் த. பிரனவன், பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் தெ. புரபானநதன் நகரசபை பொது நூலகத்தின் பிரதம நூலகர் ந . யோகேஸ்வரன், நூலகர் றிம்சானா, நூலக உதவியாளர்களான அ . அச்சுதன், உ . ரஜனிக்காந் , மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.