திருகோணமலையில் பாடசாலை மாணவர்களுக்கான கல்விக்கான உதவி தொகை வழங்கி வைப்பு

திருகோணமலையில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விக்கான உதவிதொகை பெரண்டினா நிறுவனம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்து கல்லூரி ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் நேற்று முன்தினம் (20) இடம் பெற்றது.

பெரெண்டினாவின் கல்வி ஆதரவு திட்டங்களில் ஒன்றாக, ஆண்டுதோறும் குறைந்த வருமானம் கொண்ட பெரெண்டினா பயனாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு Bright Students Scholarship திட்டத்தின் மூலம் உதவி வழங்கி வருகின்றது. இந்த உதவித்தொகை கல்வித் தராதர உயர்தர பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அத்தியாவசியமான மாதாந்த செலவுகளை ஈடு செய்ய பெரிதும் பங்களிக்கிறது.

தற்போது, ​​இந்தத் திட்டத்தின் மூலம் வருடந்தோறும் 550க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு  7 மில்லியனுக்கு மேலான தொகையை வழங்கி ஆதரவளிப்பதில் பெரெண்டினா நிறுவனம் பெருமிதம் கொள்கின்றது.

இந்த நிகழ்வானது திருகோணமலை பிரதேச வலய முகாமையாளர் திரு இ.திருச்செல்வம் தலைமையில் முதன்மை விருந்தினராக திருகோணமலை இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆரம்ப பிரிவு அதிபர் திரு.  கணேசலிங்கம் கலந்து சிறப்பித்தார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக இளைஜர் செயற்பாட்டு ஒருங்கமைப்பாளர் திரு.  டொனால்ட் மற்றும் தம்பலகாமம் கிளை முகாமையாளர் திரு.  கிருஷாந்தன் மற்றும் திருகோணமலை கிளை முகாமையாளர் G. கஜரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மற்றும் பெரெண்டினா ஊழியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் 2022 கல்வி ஆண்டுக்குரிய உயர்தர மாணவர்களுக்கு காசோலைகளும் அப்பியாச புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டது.