தியாகி அன்னை பூபதியின் இறுதி நாள் நினைவேந்தல் இன்று

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகி அன்னை பூபதியின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இன்று(19) அன்னை ஈகைச் சாவினைத் தழுவிக்கொண்ட நேரமான 8.45 மணி முதல் தியாகத்தாயின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தமுடியும்.

அதனைத் தொடர்ந்து இறுதி நினைவேந்தல் நிகழ்வு மாலை 5 மணிக்கு நடைபெறும்.

அனைவரையும் இவ் அஞ்சலி நிகழ்வில் பங்குபற்றுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.