தாயகத்தில் ஆறுமுகநாவலரின் 140வது குருபூசை தினம்..சிறப்பு வீடியோ இணைப்பு

வவுனியா பூந்தோட்டம் ஆறுமுகநாவலர் வீதியில் காணாமலாக்கப்பட்ட உறவுகளினால் அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகநாவலர் சிலையடியில் இன்று (05.12) காலை 10.30 மணியளவில் ஆறுமுகநாவலரின் 140வது குருபூசை தினம் வவுனியா நகரசபை உறுப்பினர் பாலபிரசன்னா மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பினரால் அனுஷ்ரிக்கப்பட்டது.

காணாமல் போன உறவுகள் நாவலருக்கு பூமாலை அணிவித்தும் மலர் தூவியும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை நினைத்து மனமுருகி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

காணாமலாக்கப்பட்ட உறவுகளால் சிறுகச் சேகரிக்கப்பட்ட நிதிப்பங்களிப்பில் அமைக்கப்பட்டுள்ள குறித்த ஆறுமுகநாவலரின் சிலையடியில் தமிழருவி சிவகுமார் அவர்களின் சொற்பொழிவுடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

DSC02524 தாயகத்தில் ஆறுமுகநாவலரின் 140வது குருபூசை தினம்..சிறப்பு வீடியோ இணைப்பு DSC02531 1 தாயகத்தில் ஆறுமுகநாவலரின் 140வது குருபூசை தினம்..சிறப்பு வீடியோ இணைப்பு DSC02536 தாயகத்தில் ஆறுமுகநாவலரின் 140வது குருபூசை தினம்..சிறப்பு வீடியோ இணைப்பு DSC02545 தாயகத்தில் ஆறுமுகநாவலரின் 140வது குருபூசை தினம்..சிறப்பு வீடியோ இணைப்பு