இந்தியாவின் மெய்டன் மருந்து நிறுவனம் தயாரித்த கலப்படமுள்ள இருமல் மருந்தை அருந்தியதால் உயிரிழ்ந்த 70 இற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான இழப்பீட்டை கோரும் வழக்கு கம்பியாவின் உயர் நீதிமன்றத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்த மருந்தை அருந்திய 5 வயதுக்கு குறைவான 70 இற்கு மேற்பட்ட சிறுவர்கள் சிறுநீரகம் செயலிழந்ததால் உயிரிழந்தனர். இது அந்த நாட்டில் வாழும் 2.5 மில்லியன் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மருந்தை ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம் மருந்தில் நட்சுத்தன்மையுள்ள ethylene glycol, diethylene glycol என்ற இராசாயணப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக இருந்ததாக தெரிவித்திருந்தது. இந்த இரசாயணப்பொருட்கள் காரின் பிறேக் ஒயிலுடன் கலப்பதற்கு பயன்படுத்தப்படுவதாகும்.
இந்திய நிறுவனம் மீது வழக்கை பதிவுசெய்துள்ள பாதிக்கப்பட்ட மக்கள் இறந்த ஒவ்வொரு பிள்ளைக்கும் தலா 230,000 டொலர்கள் இழப்பீடாக தரப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.