தலைவர் பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்கள் கைது

698 Views

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முகநூல் ஊடாக பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

இன்று மாலை சித்தாண்டி,செங்கலடி,வந்தாறுமுலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 07 பேர் ஏறாவூர் பொலிஸாரினால் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் அணியை சேர்ந்த முக்கிய உறுப்பினர் உட்பட ஏழு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் குறித்த நபர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இது தொடர்பில் பொலிஸாருடன் கலந்துரையாடிவருவதாக  தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply