தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான விருப்பத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்தியா பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்த நிலையில் அவரும் குறித்த திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த போதே ஜனாதிபதி ரணில் குறித்த விடயம் தொடர்பில் தெரிவித்ததாகத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில், தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் சுமார் 18 கிலோமீட்டர் தூரமாக இருக்கும் நிலையில் விரைவாக இந்தியாவில் இருந்து தலைமன்னார் ஊடாக பொருட்களை கொண்டு வரக்கூடியதாக இருக்கும் .
காங்கேசன்துறை காரைக்கால் கப்பல் சேவை மாற்றி காரைக்கால் நாகப்பட்டினம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக மோடி தெரிவித்தார்.
இந்நிலையில் தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பித்தால் விரைவானதும் வினைதிறனான சேவையை வழங்க முடியும் என மோடியிடம் பேசியுள்ளதாக ஜனாதிபதி ரணில் தெரிவித்ததாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி கந்தையா விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.