தம்பலகாமம் வைத்தியசாலை தீ சம்பவம் தொடர்பில் ஆராய்வு

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் நேற்று (01) தீப் பரவல் சம்பவம் இடம் பெற்று குறித்த கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் உபகரணங்களும் எறிந்து சாம்பலாகின.

குறித்த சம்பவம் தொடர்பில் இன்று (02) அரச பகுப்பாய்வு திணைக்களம் தடயவியல் பொலிஸார் இணைந்து தம்பலகாமம் பிரதேச வைத்தாயசாலையின் சம்பவ இடத்துக்கு சென்று மாதிரிகளை பெற்றுள்ளனர்.

இதில் ஆய்வு கூட உபகரணங்கள், மருந்துப் பொருட்கள் என பல இலட்சக்கணக்கான ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் சாம்பலாகியுள்ளன.

வெளிநோயாளர் பிரிவு தொடர்ந்தும் இன்றைய தினமும் இயங்கி வருகின்றன. இது தொடர்பான விசாரனைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  தெரியவருகிறது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் ஊடாக மதிப்பீட்டு நடவடிக்கைகள் மருந்துப்பொருட்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் தொடர்பிலும் உரிய அதிகாரிகள் சென்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.